நீதித்துறை அமைச்சர், காவல்துறைத் தலைவர்களின் பதவி அடுத்தடுத்து பறிப்பு! ராணுவ அமைச்சர் கைது..பரபரப்பில் தென்கொரியா
தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவசர நிலை பிரகடனம்
ஜனாதிபதி யூன் சுக் யோல் ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பின்னர் திரும்பப்பெற்றது தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், ராணுவ அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ராணுவ அமைச்சர் கிம் யாங் ஹியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், ஆளுங்கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.
எனினும், எதிர்க்கட்சிகள் இரண்டாவது முறையாக பதவிநீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.
பதவிகள் பறிப்பு
இந்த நிலையில், தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தேசிய காவல்துறைத் தலைவர் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |