50 வயது வரை ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு - மத்திய அரசு ஆலோசனை
இந்தியாவில், வாகனம் தொடர்பான சேவைகளில் ஒரு பெரிய சீரமைப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு
இதன்படி, தற்போது ஓட்டுநர் உரிமம் பொதுவாக 20 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
இந்தச் செல்லுபடியாகும் காலத்தை, உரிமதாரர் 50 வயதை அடையும் வரை நீட்டிப்பதற்கான ஒரு திட்டத்தை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதே போல், வாகன உரிமை மாற்றங்கள் மற்றும் அனுமதிப் பத்திரப் புதுப்பித்தல்களை முழுவதுமாக டிஜிட்டல் தளங்கள் மூலமாகவே முடிக்க அனுமதிக்கும் திட்டம் குறித்தும் பரிசீலித்து வருகிறது.
இது அமுல்படுத்தப்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் இந்தச் சேவைகளுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இதன் மூலம், வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் நேரம் மிச்சமாகும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் புள்ளிகளை வழங்கும் ஒரு முறையின் மூலம் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
எதிர்மறைப் புள்ளிகள் அதிகரித்தால், உரிமங்களை இடைநீக்கம் செய்யவோ அல்லது ரத்து செய்யவோ வழிவகுத்து, மீண்டும் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுக்க உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |