தமிழ் சீரியல் நடிகை நந்தினி விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சீரியல் நடிகை நந்தினி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
நடிகை நந்தினி
கலைஞர் டிவியில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் கௌரி என்ற தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், துர்கா மற்றும் கனகா என்ற கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளவர் நடிகை நந்தினி.

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர், கன்னட சீரியல்கள் மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழில் கௌரி சீரியலில் அறிமுகமானதன் மூலம், ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
கௌரி சீரியலின் திரைப்பிடிப்பு முதலில் பெங்களூருவில் நடந்து வந்த நிலையில், நந்தினி பெங்களூருவில் வசித்து வந்துள்ளார்.
சமீபத்தில், திரைப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னைக்கு வந்த அவர், பிரேக் என்பதால் மீண்டும் பெங்களூருவிற்கு திரும்பியுள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், நேற்று இரவு பெங்களூருவில் அவர் தங்கியிருந்த அறையில், தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
உடலை கைப்பற்றிய காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலறிந்த கௌரி சீரியல் குழுவினர் சிலர் பெங்களூருவிற்க்கு சென்றுள்ளனர்.
இளம் வயதில் நந்தினி உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளங்களில், நந்தினியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |