3000 டன் உக்ரைன் சோளம்...பாதியில் பழுதடைந்தது சரக்கு கப்பல்: இஸ்தான்புல்லில் தரையிறக்கம்!
உக்ரைனில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட தானிய கப்பல் பழுதடைந்து பாதியில் நிறுத்தம்.
3000 டன் சோளத்துடன் கப்பல் இஸ்தான்புல்லில் தரையிறக்கம்.
உக்ரைனில் இருந்து இத்தாலிக்கு தானியங்களை ஏற்றிச் சென்ற லேடி ஜெஹ்மா சரக்கு கப்பல் பாதி வழியில் பழுதடைந்ததை தொடர்ந்து, சுமார் 3000 டன் சோளத்தை ஏற்றி வந்த கப்பல் துருக்கி இஸ்தான்புல்லில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து உக்ரைனில் தேங்கியுள்ள உணவு தானியங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
Photo: Turkish defence ministry
அதனடிப்படையில் உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து இத்தாலியின் ரவென்னாவிற்கு சோளத்துடன் சரக்கு கப்பல் புறப்பட்டது.
இவ்வாறு உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பலில் எதிர்பாராத விதமாக சுக்கான் பழுதடைந்து (rudder failure) போஸ்பரஸ் ஜலசந்தியில் கரை ஒதுங்கியது.
கூடுதல் செய்திகளுக்கு: துணை ஜனாதிபதியின் தலையை குறிபார்த்து துப்பாக்கி சூடு: வெளியான வீடியோ ஆதாரம்!
Sky News
இதனைத் தொடர்ந்து 3,000 டன் சோளத்தை ஏற்றிச் சென்ற 173 மீட்டர் லேடி ஜெஹ்மா சரக்கு கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நங்கூரமிட்டுள்ளதாக துருக்கியின் கடலோர பாதுகாப்பு பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.