சூடான் கலவரத்தில் சிக்கி கொண்ட பிரித்தானிய தம்பதி: பாட்டியின் உடலை மீட்க போராடும் இளம் பேத்தி
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிக்கி உயிரிழந்த பாட்டியை மீட்க அவரது பேத்தி அஜார் ஷோல்காமி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
உள்நாட்டு கலவரம்
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையிலான மோதல் பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில், தலைநகர் கார்டூமில் இரு பிரிவுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான மனிதாபிமான ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை இருத்தரப்புகளையும் சென்றடைந்துள்ளது.
Getty
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் அஜார் ஷோல்காமி(Azhaar Sholgami) என்ற பெண் சூடானில் உயிரிழந்த பாட்டியின் உடலை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சூடானில் சிக்கி கொண்ட தம்பதி
அஜார் ஷோல்காமி-யின் தாத்தா அப்தல்லா ஷோல்காமி(85) மற்றும் அவரது பாட்டி அலவேயா ரேஷ்வான் (Abdalla Sholgami and Alaweya Reshwan) பிரித்தானிய தூதரகம் மற்றும் சூடான ராணுவ தலைமையகம் அருகில் உள்ள கார்ட்டூன் பலடியா தெருவில் வசித்து வந்த நிலையில், சூடான் உள்நாட்டு சண்டையில் சிக்கி கொண்டுள்ளனர்.
பிரித்தானியரான அப்தல்லா ஷோல்காமி தனது ஊனமுற்ற மனைவி அலவேயா ரேஷ்வான்-வை தனியாக வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்ற போது, மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவரை பத்திரமாக மீட்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
AZHAAR SHOLGAMI
ஆனால் அவரது மனைவி அலவேயா ரேஷ்வான் குறித்த தகவல் முதலில் கிடைக்க பெறதாக நிலையில், பிறகு துருக்கி தூதரக அதிகாரிகளால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அஜார் ஷோல்காமி-யின் தாத்தா மற்றும் பாட்டி பிரித்தானியாவின் வெளியேற்ற நடவடிக்கையை தவறவிட்டதை தொடர்ந்து, தலைநகர் கார்ட்டூமில் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில் பாட்டியின் உடலை எப்படியாவது மீட்க நியூயார்க்கில் உள்ள அவரது பேத்தி அஜார் ஷோல்காமி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
AZHAAR SHOLGAMI
இது தொடர்பாக அஜார் ஷோல்காமி பேசிய போது, நான் என்னுடைய பாட்டியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பேன், நான் நியூயார்க் நகருக்கு செல்வதற்கு முன்பு என்னை தனியாக விட்டு விடப் போகிறீர்கள் என்று பாட்டி என்னிடம் மிகுந்த பயத்துடன் தெரிவித்தார்.
அப்போது, உங்களுடன் நான் எப்போதும் இருப்பேன் என்று தெரிவித்தேன், ஆனால் அவரை நான் இப்போது விட்டுவிட்டேன் என உணர்கிறேன் என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.