சூடான் துணை ராணுவம் வசம் சிக்கிய ஆபத்தான உயிரியல் ஆய்வகம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

Sudan
By Arbin Apr 26, 2023 04:50 AM GMT
Report

சூடானில் கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்ட உயிரியல் ஆய்வகம் ஒன்றை துணை ராணுவப்படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயிரியல் ஆய்வகம் சிக்கலில்

இந்த மாத தொடக்கத்தில் சூடானில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களால் குறித்த ஆய்வகத்தை பாதுகாக்க முடியவில்லை எனவும், தற்போது போலியோ, காலரா மற்றும் அம்மை நோயை ஏற்படுத்தும் கிருமிகளை ஆய்வு செய்யும் உயிரியல் ஆய்வகம் சிக்கலில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் துணை ராணுவம் வசம் சிக்கிய ஆபத்தான உயிரியல் ஆய்வகம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை | Sudan Militants Seize Lab Deadly Pathogens @AFP

இந்த நிலையில், சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் நிமா சயீத் அபித் என்பவர் தெரிவிக்கையில் நிலைமை மிக மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்றார்.

ஏப்ரல் 15ம் திகதி சூடான் படைகளுக்கும் இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையே வன்முறை மோதல்கள் வெடித்த பின்னர் இதுவரை குறைந்தது 427 இறப்புகள் மற்றும் 3,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தற்போது 72 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமுலில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் சூடானை விட்டு வெளியேறி வருகின்றனர். பல்வேறு நாடுகள் தங்கள் பிரஜைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

சூடான் துணை ராணுவம் வசம் சிக்கிய ஆபத்தான உயிரியல் ஆய்வகம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை | Sudan Militants Seize Lab Deadly Pathogens @getty

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், 15ம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் சுகாதார மையங்கள் மீது 14 தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும், பற்றாக்குறையால் 20 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய பொது சுகாதார ஆய்வகம்

சர்வதேச அமைப்புகளை சுதந்திரமாக பணியாற்ற அனுமதித்திருந்தால், இறந்தவர்களில் பாதிக்கும் மேலான மக்களை காப்பாற்றியிருக்கலாம் எனவும் WHO சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கார்டூம் பகுதியில் தான் தேசிய பொது சுகாதார ஆய்வகம் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம் தற்போது அவர்கள் வசம் சிக்கியுள்ளதால், மிக மிக ஆபத்தான உயிரியல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் நிமா சயீத் அபித் அச்சம் தெரிவித்துள்ளார்.

சூடான் துணை ராணுவம் வசம் சிக்கிய ஆபத்தான உயிரியல் ஆய்வகம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை | Sudan Militants Seize Lab Deadly Pathogens @getty

WHO உட்பட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து சூடான் அரசாங்கத்தின் உதவியுடன் அந்த ஆய்வகத்தை முன்னெடுத்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US