தாமதமான விமானம்... கேபிள் கார் விபத்தில் பலியான வயதான தம்பதி தொடர்பில் வெளியான பகீர் தகவல்
இஸ்ரேல் புறப்படவிருந்த வயதான தம்பதி, பதிவு செய்த விமானம் தாமதமானதால், குடும்பத்துடன் கேபிள் கார் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இத்தாலியில் கேபிள் கார் விபத்தில் கொல்லப்பட்ட 14 பேர்களில் Yitzhak(81) மற்றும் Barbara Cohen(71) தம்பதி தொடர்பிலேயே தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட தயாரானவர்கள் Yitzhak மற்றும் Barbara Cohen தம்பதி. ஆனால் இஸ்ரேல்- காசா மோதல் உச்சத்தில் இருந்ததால், இவர்கள் முன்பதிவு செய்த விமானமானது ஒரு வார காலம் தாமதமாகலாம் என அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே Yitzhak மற்றும் Barbara Cohen தம்பதி தங்களது பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட ஆறு பேர் குடும்பத்துடன் கேபிள் கார் பயணத்திற்கு சென்றுள்ளார்.
இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் 5 வயதேயான ஈதன் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று தற்போது கண் விழித்துள்ளார்.
இதனிடையே, பிரான் குடும்பத்தின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்தது என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரையும் உறவினர்களையும் இழந்த சிறுவன் ஈதன் இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் உள்ளார்.
இஸ்ரேலிய நாட்டவர்களான அமித் பிரானின் குடும்பம் கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தாலியில் பவியா பகுதியில் குடியிருந்து வருகிறது.
அமித் தமது மருத்துவ படிப்பை முடிக்கும் முனைப்பில் இருந்து வந்துள்ளார். இந்த விபத்தில் அமித் பிரான்(30) அவரது மனைவி தால்(26) மற்றும் டாம்(2) ஆகியோர்களுடன் Yitzhak மற்றும் Barbara Cohen தம்பதியும் மரணமடைந்துள்ளனர்.