கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவரின் கல்லறை: வெளியாகியுள்ள வீடியோ
வாக்னர் கூலிப்படைத்தலைவரான Yevgeny Prigozhin குறித்து பல்வேறு வதந்திகள் பரவியவண்ணம் உள்ளன. அவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஒருபுறமும், இல்லை, அவர் உயிருடன் இருக்கிறார் என மறுபுறமும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
வாக்னர் கூலிப்படைத் தலைவரின் கல்லறை
இந்நிலையில், அவர் எங்கு அடக்கம் செய்யப்படப்போகிறார் என்பதைக் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், செயிண்ட் பீற்றர்ஸ்பர்கிலுள்ள ஒரு கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி ரஷ்யாவுக்கான ஊடகவியலாளர் Steve Rosenberg தெரிவித்துள்ளார்.
ராணுவ மரியாதை எதுவும் இல்லாமல், குறைந்த அளவிலான ஆட்களே பங்கேற்க, Prigozhin உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கல்லறையை சுற்றிலும் பொலிசார் காவலிருப்பதால், அருகே சென்று அவர் புதைக்கப்பட்டுள்ள இடத்தை உறுதி செய்ய இயலவில்லை என Steve தெரிவித்துள்ளார்.
முன்பு புடினுக்கு நெருக்கமானவராக இருந்தும், எந்த பரபரப்பும் இல்லாமல் Prigozhin உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதற்குக் காரணம், ரஷ்யாவைப் பொருத்தவரை, Prigozhin ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதால், அவர் துரோகம் செய்ததாக கருதப்படுகிறது. ஆகவேதான் அரசு மரியாதையோ, அவரது கூலிப்படையினருடைய மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளோ கூட இல்லாமல் Prigozhinஉடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |