படகு மற்றும் ரயில் சேவைகளை மொத்தமாக நிறுத்திய ஐரோப்பிய நாடு
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நீட்டிக்கப்பட்ட வேலை நேரங்களுக்கு எதிரான ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தின் போது போராட்டம் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் ரயில், படகுகள் மற்றும் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பொது வேலைநிறுத்தம்
13 மணி நேரம் வேலை என்ற உச்சவரம்பை நீட்டிக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து கிரேக்கத்தின் மிகப்பெரிய தனியார் மற்றும் பொது தொழிற்சங்கங்களால் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முடிவானது இரண்டு வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதாலையே எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டமானது அக்டோபரில் அமுலுக்கு வரும் என்றே தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் இந்த முடிவானது தொழிலாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. மேலும், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களைக் குறைத்து வேலையின்மையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்திய 2009-2018 கடன் நெருக்கடியிலிருந்து கிரேக்கம் மீண்டு வரும் நிலையில், அரசாங்கம் இந்த வேலை நேர நீட்டிப்பை முன்வைத்துள்ளது.
2009-2018 காலகட்டத்திற்கு பின்னர் தொடர்ச்சியான ஊதிய உயர்வுகளுக்குப் பிறகு கிரேக்கத்தின் பொருளாதாரம் மீண்டு வருகிறது, வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டுவசதி மற்றும் உணவு விலைகள் அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தியில் கிரேக்கர்கள் தங்கள் ஐரோப்பிய சகாக்களை விட இன்னும் பின்தங்கியுள்ளனர்.
40% கூடுதல் நேர ஊதியம்
இந்த நிலையில், GSEE தொழிற்சங்கம் தெரிவிக்கையில், 13 மனி நேரம் வேலை என்பதை தாங்கள் நிராகரிப்பதாகவும், வேலை நேரம் என்பது எங்களது வாழ்க்கை அது ஒரு பண்டமல்ல.
GSEE தொழிற்சங்கமானது தனியார் துறையில் சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. ஆனால் இந்த சீர்திருத்தம் வருடத்திற்கு 37 நாட்கள் வரை மட்டுமே பொருந்தும் என்றும், தொழிலாளர்களுக்கு 40% கூடுதல் நேர ஊதியம் பெறும் வாய்ப்பை வழங்கும் என்றும் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |