கிரீஸில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் மரணம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் 154 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளது, அதில் 64 இடங்களில் இன்னும் தீ எரிந்துகொண்டே இருக்கிறது.
அங்கு வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளதால், பல்வேறு பகுதிகளில் தீ மூண்டதாக கிரீஸ் பிரதமர் கூறியுள்ளார்.
தலைநகர் ஏதன்ஸின் (Athen) வடக்குப் பகுதியிலிருந்து, எதிர்பாரா வண்ணம் வீசும் பலத்த காற்று, காட்டுத்தீயைக் கடுமையாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 38 வயதுத் தன்னார்வ தீயணைப்பாளர் ஒருவர் மீது மின்சாரக் கம்பம் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு காட்டுத்தீயில் பலியான இருவரில் அவரும் ஒருவர். மேலும் 20 பேர் தீயில் காயமடைந்தனர்.
ஏதன்ஸில் மூண்ட காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், வர்த்தகங்கள் எனப் பலவற்றையும் காட்டுத்தீ சேதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கிரேக்கத் தீவான இவியாவின் (Evia) கரைகளைக் காட்டுத்தீ சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
அங்கிருந்து நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் கப்பல்கள், மீன்பிடிப் படகுகள் ஆகியவற்றின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.









