ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்: கிரேக்கத்தின் கிரீட் தீவில் ஆச்சரியம்: பின்னணி
புழுதிப் புயல் காரணமாக கிரீக் நாட்டின் கிரீட் தீவில் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது பொதுமக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்
கிரேக்கத்தின் கிரீட்(Crete) தீவில் வித்தியாசமான இயற்கை நிகழ்வாக தலைநகர் ஹெராக்லியனில் வானம் ஆரஞ்சு நிறத்தில் மாறியது.
புகைமூட்டத்துடன் கூடிய ஆரஞ்சு நிறத்தில் நகரம் காணப்பட்டதால் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அப்பகுதி மக்கள் எதிர்கொண்டனர்.
Red sky now not only in Australia: Powerful sandstorm hits the Greek island of Crete. pic.twitter.com/uthsHsLqJX
— NEXTA (@nexta_tv) April 1, 2026
சஹாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய மணல் புழுதி புயல் காரணமாக தெற்கு ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் இந்த புழுதி புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
தெளிவான பார்வை திறன் இல்லாத காரணத்தால் பல விமானங்கள் தரையிறங்க வழியில்லாம் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் காற்றில் கலந்துள்ள நுண்ணிய மணல் துகள்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானம் ஆரஞ்சு நிறமாக காரணம் என்ன?
சிரோக்கோ(Sirocco) என அழைக்கப்படும் பருவக்காற்று சஹாரா பாலைவனத்தின் மணல்களை வான் நோக்கி எழுப்புகின்றன.

இந்த மணல் துகள்கள் சூரிய ஒளியில் படும் போது அதில் உள்ள நீல நிறத்தை சிதறடித்து நீண்ட அலைவரிசை கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களை வெளியே கடத்துகின்றன.
இதனால் தான் இத்தகைய மணல் புயல்களின் போது வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |