கலிபோர்னியா கிரீன்பீல்டு துப்பாக்கிச் சூடு: இரட்டை கொலையை உறுதிப்படுத்திய பொலிஸார்
கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு
கடந்த திங்கட்கிழமை இரவு கலிபோர்னியாவின் கிரீன்பீல்டு பகுதியில் உள்ள 145 எல் காமினோ ரியல் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அப்பகுதி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவு 10.44 மணியளவில் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்தாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விரைந்தனர்.

இதையடுத்து அங்கு துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் முதலுதவி சிகிச்சைகள் வழங்கியதோடு, வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளோ அல்லது புகைப்படங்களோ பொதுமக்களிடம் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களையோ அல்லது இந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையோ பொலிஸ் அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கொலைக்கான காரணங்கள் குறித்தும் எந்தவொரு விளக்கம் வழங்கப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |