வரதட்சணையில் குளிர்சாதன பெட்டி இல்லை! மணப்பெண்ணை திருமண மேடையில் இருந்து தள்ளிவிட்ட மணமகன்
வரதட்சணையில் குளிர்சாதன பெட்டி வழங்கப்படாததை அறிந்த மணமகன் திருமண மேடையில் இருந்து மணமகளை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேடையில் இருந்து மணமகளை தள்ளிவிட்ட மணமகன்
உத்தரபிரதேச மாநிலம் கனுஜ் மாவட்டத்தில் (Kanuj) மே 11ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், மணமகன் திருமண மேடையில் இருந்து மணமகளை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தின் ஒரு பகுதியான ஜெயமாலா நிகழ்ச்சி நிறைவுற்று இருந்த நிலையில், மணப்பெண்ணின் வீட்டாரின் வரதட்சணையில் குளிர்சாதன பெட்டியை தர மறுத்துவிட்டனர் என்ற தகவல் மணமகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மணமகன், திருமண மேடையில் நின்று கொண்டு இருந்த மணமகளை பிடித்து கீழே தள்ளிவிட்டார், இதில் மணப்பெண் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து இருவீட்டார் இடையிலும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது, அத்துடன் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் பலர் இந்த மோதலில் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மணப்பெண் இல்லாமல் ஊர் திரும்பிய மணமகன்
மணமகனின் பயங்கர செயலை அடுத்து, பஞ்சாயத்தை கூட்டி இருவீட்டாரும் மேற்கொண்டு திருமணத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
Shutterstock
இதனால் எட்டாவைச் சேர்ந்த மணமகன் மணப்பெண் இல்லாமல் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இருவீட்டாரும் திருமணத்தை பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் நிறுத்திக் கொண்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.