காருக்கு பதில் வந்து நின்ற வாகனம்., புதுமணப் பெண்ணுக்கு கணவன் கொடுத்த சர்பரைஸ்!
உத்தர பிரதேசத்தில் புதுமணப் பெண்ணுக்கு திருமண நாளை மறக்கமுடியாத நாளாக மற்ற மணமகன் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் வியாழக்கிழமை நடந்த திருமண விழாவில் இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது.
புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சோலா கிராமத்தைச் சேர்ந்த மணமகன் லோகேந்திர சிங் சோலங்கி, உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்க்கியைச் சேர்ந்த தனது புதிய மனைவி யாஷான்சி ராணாவை திருமண நாளில் ஆச்சரியப்படுத்த முடிவுசெய்தார்.
ANI
திருமணம் முடிந்து மணமகனின் வீட்டிற்கு செல்ல சாதாரணமாக காரை பயன்படுத்தாமல், திருமண மண்டலத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஹெலிகாப்டரை கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். அந்த ஹெலிகாப்டரில் தான் புதுமண தம்பதியினர் தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
"இது நான் யஷான்ஷிக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ், இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று நான் நினைத்தேன். திட்டம் என்னுடையது என்றாலும், எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஆதரவு தேவைப்பட்டது. முழு விடயமும் சரியான நேரத்தில் முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மணமகள் வீட்டார் இதை அறிந்ததும், மிகவும் உற்சாகமாக இருந்தனர்" என்று சோலங்கி கூறினார்.
"வழக்கமாக மக்கள் கார்களைப் பயன்படுத்துகிறார்கள். என் மனைவி சிறப்பு வாய்ந்தவர், மேலும் அவர் ஒரு கமர்ஷியல் பைலட் - அவர் ஹெலிகாப்டருக்குத் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்" என்று மணமகன் கூறினார்.
இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், கிளம்பத் தயாரான பிறகுதான் தெரிந்தது என்றும் மணமகள் தாகூர் கூறினார்.
மணமகன் லோகேந்திர சிங் சோலங்கி அவுஸ்திரேலியாவில் பைலட்டாகவும், மணமகள் யாஷன்ஷி சிங்கும் வணிக விமானியாகவும் பணிபுரிகிறார்.