ஜிஎஸ்டி மறுசீரமைப்பு - என்ன பொருட்களின் விலை குறையும்? அதிகரிக்கும்?
ஜிஎஸ்டி மறுசீரமைப்பில், என்ன பொருட்களின் விலை உயரும் என்ன பொருட்களின் விலை குறையும் என்பதை பார்க்கலாம்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி வரி விகித மாற்றப்படி, 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்குகளில், 12 மற்றும் 28 அடுக்குகள் நீக்கப்பட்டு, 5%, மற்றும் 18% அடுக்குகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சில பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
விலை குறையும் பொருட்கள்
UHT பால், பனீர், பீட்சா ரொட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி, பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவை 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள், மினரல் வாட்டர், ஆகியவற்றின் மீதான வரி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மால்ட், ஸ்டார்ச், ஐஸ்க்ரீம், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள், கோகோ பொருட்கள், தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கான்டாக்ட் லென்ஸ்கள், கண்ணாடி லென்ஸ்கள் மற்றும் ஃபிரேம்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உரங்கள், விதைகள், மண் தயாரிப்பதற்கான விவசாய மற்றும் தோட்டக்கலை இயந்திரங்கள், அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள், ட்ராக்டர்கள் ஆகியவற்றின் மீதான வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகிய பொருட்கள் மீதான வரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பூ, டூத் பேஸ்ட், காலனி மற்றும் ஆடை பொருட்களின் வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சிறிய கார்கள், 350CC திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், ப்ரொஜெக்டர்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிக்கும் பொருட்கள்
பான் மசாலா, குட்கா, சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலை பொருட்கள், பிரீமியம் மதுபானங்கள், காஃபின் பானங்கள், கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் ஆகியவற்றுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1,200 சிசிக்கு மேல் மற்றும் 4,000 மி.மீ.க்கு மேல் உள்ள அனைத்து ஆட்டோமொபைல்கள், 350 சிசிக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான படகுகள் மற்றும் விமானங்கள் மற்றும் பந்தய கார்கள் விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆகியவற்றுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி மீதான வரி 5% ஆக அதிகரிக்கபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |