கொல்கத்தாவை வீழ்த்திய குஜராத்: 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டனஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் அபார வெற்றி
நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தியுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர், கேப்டன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அபாரமாக ஆடிய கில் 55 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
பட்லர் 23 பந்துகளில் 41 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள்) விளாச, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது.
சொதப்பிய கொல்கத்தா
199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
Quick reflexes ⚡ Calm demeanor 😏
— IndianPremierLeague (@IPL) April 21, 2025
🎥 Prasidh Krishna continues his wicket-taking streak 👏
Updates ▶ https://t.co/TwaiwD5D6n#TATAIPL | #KKRvGT | @gujarat_titans pic.twitter.com/0Cwv0POKya
தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஹானே நிதானமாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தார்.
ஆனால், அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 14 ஓட்டங்களும், ரிங்கு சிங் 14 ஓட்டங்களும் அதிரடி வீரர் ரஸ்ஸல் 21 ஓட்டங்களும், ராமந்தீப் சிங் ஒரு ஓட்டமும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.
Marching ahead in emphatic fashion 👊
— IndianPremierLeague (@IPL) April 21, 2025
Table-toppers #GT continue their winning run with a dominant 39-run victory👏
Scorecard ▶ https://t.co/TwaiwD5D6n#TATAIPL | #KKRvGT | @gujarat_titans pic.twitter.com/qoqWyWAhFJ
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |