சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடி அசத்தல்: IPl இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்
2026 ஐபிஎல்லின் இரண்டாவது தகுதிச்சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி
2026 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்று சண்டிகரில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
47 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 96 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.

இறுதிப் போட்டியில் குஜராத் அணி
215 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 53 பந்துகளில் 104 ஓட்டங்களையும், சாய் சுதர்சன் 32 பந்துகளில் 58 ஓட்டங்களும் குவித்தனர்.
இதனால் குஜராத் அணியில் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடி 167 ஓட்டங்கள் குவித்தது.

இறுதியில் 18.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு குஜராத் அணி 219 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 29ம் திகதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு குஜராத் அணி முன்னேறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |