கிழக்கு ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட புதிய கொடிய வைரஸ்! WHO தகவல்
கிழக்கு ஆப்பிரிக்காவில் முதல் marburg நோய் உறுதி செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் marburg வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலியானதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
1967 முதல் பெரும்பாலும் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் சுமார் 12 முறை marburg வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.
தற்போது முதல் முறையாக கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
கினியாவில் கடந்த வாரம் முதன் முறையாக நபர் ஒருவருக்கு marburg தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது, இதன் பின் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது.
பின்னர் அந்த நோயாளி marburg தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை கினியாவின் தேசிய ரத்தக்கசிவு காய்ச்சல் ஆய்வகம் மற்றும் செனகலில் உள்ள பாஸ்டர் நிறுவனம் உறுதிசெய்தது.
எபோலா போல் பரவும் marburg தொற்று பரவலை கட்டுப்படுத்த கினியா சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வைரஸ் strain மற்றும் தொற்று நிர்வாகத்தைப் பொறுத்து marburg தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை மாறுபட்டுள்ளது என WHO தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் திசுக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் marburg தொற்று பரவுதல் ஏற்படுகிறது.
தலைவலி, வாந்தி இரத்தம், தசை வலி மற்றும் பல்வேறு துவாரங்கள் வழியாக இரத்தப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என WHO தெரிவித்துள்ளது.