கின்னஸ் சாதனை படைத்த 2500 கிலோ சாக்லேட் பாக்ஸ்! என்ன ஸ்பெஷல்
அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்ற நிறுவனமானது உலகில் 2500 கிலோவுக்கும் அதிகமான எடையிலான சாக்லேட் பாக்ஸை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளது.
2500 கிலோ சாக்லேட் பெட்டி:
பொதுவாக சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று தான். அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்ற நிறுவனம் உலகில் கற்பனையாக இருக்கக்கூடிய இந்த சாக்லேட் பெட்டியை தயாரித்துள்ளது.
உலக கின்னஸ் சாதனையின் படி, இந்த சாக்லெட் பெட்டி 2547.50 கிலோ கொண்ட பிரம்மாண்டமான பெட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் கூட 1400 முதல் 1400 கிலோ தான் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த சாக்லேட் பெட்டியின் எடை அதைவிட அதிகமானது.
ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற நிறுவனம் தயாரித்த இந்த சாக்லேட் நிரப்பப்பட்ட பெட்டியானது 9.27 மீ x 4.69 மீ x 0.47 மீ (30.43 அடி x 15.41 அடி x 1.55 அடி) அளவிடப்பட்டதாகவும், கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்காவின் மிசோரி, கன்சாஸ் நகரில் இது காட்சிபடுத்தப்பட்டதாகவும் உலக சாதனை பராமரிப்பு அமைப்பு கூறியுள்ளது.
சாக்லேட் பெட்டியில் என்ன இருக்கிறது?
இந்த பிரம்மாண்டமான கேரமல் சாக்லேட் பெட்டியில் தேங்காய் ,பழம் மற்றும் நட்ஸ் கேரமல், வேர்க்கடலை , பெக்கன் டிலைட், ராஸ்பெர்ரி கிரீம், ஸ்ட்ராபெரி கிரீம், டோஃபி மற்றும் ட்ரஃபுல், சாக்லெட்ட் மூடப்பட்ட பாதாம் மற்றும் 9 வெவ்வேறு சாக்லேட் சுவைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், ரஸ்ஸல் ஸ்டோவர் சாதனையை முறியடிக்க 205 ராட்சத சாக்லேட் துண்டுகளை பயன்படுத்தியுள்ளது. இந்த சாக்லேட் துண்டுகளானது ரஸ்ஸல் ஸ்டோவர்யின் ஆலைகளில் வடிவமைக்கப்பட்டன.
சிறிய சாக்லேட் துண்டுகள் 4.53 கிலோ மற்றும் பெரிய சாக்லேட் துண்டுகள் 16 கிலோ எடை கொண்டது எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |