நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல் - 8 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
குஜராத்தில் பிபர்ஜாய் புயல் நாளை கடக்கவிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குஜராத்தை புரட்டப்போகும் பிபர்ஜாய் புயல்
குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் கட்சி பகுதிக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே நாளை பிபர்ஜாய் புயல் கரையை கடக்க உள்ளது. இதனால், மத்திய அரசு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
8 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, புயல் கரையை கடக்கும்போது எந்தவிதமான உயிர் சேதம் ஏற்படக்கூடாது.
புயல் நிலவரத்தை தொடர்ந்து 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டும். பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ளும் குஜராத் அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலோர மாவட்டங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என்றார்.
Latest location of Bibarjoy cyclone with calm morning in Karachi #CycloneBiporjoy#Biporjoy#CycloneAlert #CycloneBiparjoyUpdate #Cyclone #KarachiWeather pic.twitter.com/c5aKFtzfvl
— Saeed Rao (@raosaeed) June 14, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |