குஜராத் மருத்துவமனை தீ விபத்தால் சூழ்ந்த புகை! 125 நோயாளிகள் வெளியேற்றம்
இந்திய மாநிலம், குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஹிபாக் பகுதியில் 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையானது ஒரு அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது.
இந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 125 நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணியின் காரணமாக, அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சாஹிபாக் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் எம்.டி.சம்பவத் கூறுகையில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறி கொண்டிருக்கிறது.
சுமார் இரண்டு டஜன் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |