சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் - தடவிக்கொடுத்து உயிர் தப்பிய அதிசயம்

Gujarat
By Karthikraja Jul 08, 2026 01:46 PM GMT
Report

சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் சிக்கிய நபர் அதன் தலையை தடவிக்கொடுத்து உயிர் தப்பியுள்ளார்.

சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள்

குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சிங்கங்கள் அடிக்கடி கிராமங்களுக்குள் வரும் சம்பவம் நிகழ்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா தாலுகாவில் உள்ள கராஜியா கிராமத்தில், கலுபாய் பர்மர் (Kalubhai Boghabhai Parmar) என்பவர் அங்குள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வழங்கிக்கொண்டிருந்தார்.

சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் - தடவிக்கொடுத்து உயிர் தப்பிய அதிசயம் | Gujarat Lion Trapped Man For 30 Min How He Escaped

காலை 8;30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

அதில் சிங்கம் அவரின் கால்கள் மீது தனது கால்களையும், அவரின் ஒரு கையை தனது வாயிலும் வைத்து பிடித்திருந்தது. 

அருகே கூடியிருந்த மக்கள் கூச்சலிடும் கற்களை வீசியும் சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால் சுமார் 30 நிமிடங்கள் சிங்கம் அவரை தன் பிடியில் வைத்திருந்தது.

அதன் பின்னர் அவரை விடுவிடுத்து, மாட்டு தொழுவம் அருகே சென்றது. ஆனால் மாடுகளை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து தப்பி சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தான் பிறந்த அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

தான் பிறந்த அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும், சிங்கம் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

கலுபாய் பர்மர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தடவிக்கொடுத்து உயிர் தப்பினார்

இது குறித்து பேசிய அவர், "பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே இருந்த சிங்கம்முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்வி சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்தது.

பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார். 

ஒரு நிமிடத்திற்கு 22,400 அடி கீழ்நோக்கி சரிந்த விமானம் - கடலில் தேடும் பாகிஸ்தான்

ஒரு நிமிடத்திற்கு 22,400 அடி கீழ்நோக்கி சரிந்த விமானம் - கடலில் தேடும் பாகிஸ்தான்

குஜராத்தில் கடந்த மாதம் ஜூன் 16 அன்று, அம்ரேலி மாவட்டத்தில் 25 வயதான உணவக ஊழியர் சிங்கம் தாக்கியதில் உயிரிழந்தார்.

சில நாட்களுக்குப் பின்னர் கம்பா தாலுக்காவில் உள்ள சதுரி கிராமத்தில் தனது தாத்தாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்த 5 வயது சிறுவன் சிங்கம் தாக்கியதலில் உயிரிழந்தான்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US