வெளியே போர் உச்சகட்டம்... இது கண்ணாமுச்சி ஆட்டம் என தனது மூன்று பிள்ளைகளிடம் விளக்கிய தந்தை
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையேயான சண்டையில் சிக்கிக்கொண்ட தந்தை ஒருவர் தமது பிள்ளைகளிடம் அது ஒரு கண்ணாமுச்சி ஆட்டம் என விளக்களித்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
கடுமையான துப்பாக்கி சண்டை
சூடான் தலைநகர் கார்டூமில் அமைந்துள்ள குடியிருப்பில் பதுங்கியிருந்துள்ளது முன்சீர் சல்மானின் குடும்பம். வெளியே இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
@reuters
37 வயதான முன்சீர் சல்மான் தெரிவிக்கையில், அந்த சண்டைக்கு நடுவில் நான் இருந்தேன். அது பயங்கரமான ஒரு நிலை, துரதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி துப்பாக்கிச் சூடு நடப்பது இது முதல் முறை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளுடன் தனியாக வாழும் தாம் இப்படியான சூழலில் பொறுமை காக்க வேண்டும் எனவும், இது வெறும் ஒரு விளையாட்டு தான், கண்ணமுச்சி ஆட்டம் என தமது பிள்ளைகளுக்கு விளக்கமளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது பிள்ளைகள் இதுவரை அனுபவித்திராத அனுபவம், அச்சுறுத்தல் மிகுந்தது, ஆனால் நான் அதை அவர்களுக்கு விளையாட்டாக மாற்ற முயற்சித்தேன் என்றார் முன்சீர் சல்மான்.
சைப்ரஸ் வழியாக இங்கிலாந்துக்கு
இரட்டைக் குடியுரிமை பெற்ற பிரித்தானிய-சூடானைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான முன்சீர், சைப்ரஸ் வழியாக இங்கிலாந்துக்குச் செல்லக் காத்திருந்தபோது தனது கதையைச் சொன்னார்.
சூடானில் சிக்கியுள்ள பிரித்தானிய மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு Wadi Saeedna விமான தளத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய நிர்வாகம் மொத்தம் 8 விமானங்களை பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் எத்தனை எண்ணிக்கையிலான மக்கள் மீட்கப்படுவார்கள் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.