ஜெருசலேமில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: தேடுதல் வேட்டையில் பொலிஸார்!
- ஜெருசலேமில் மர்ம நபர் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு
- தாக்குதலில் மூன்று பேர் மரணம், ஏழு பேர் படுகாயம்
ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்ததில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல், இஸ்லாமிய ஜிஹாத் தளபதியை கொன்ற பிறகு காஸாவில் மூன்று நாட்கள் இடைவிடாத சண்டை வெடித்தது, இதில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மூன்று பாலஸ்தீனிய போராளிகளும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது காசா பகுதியில் 49 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை மற்றும் கடுமையான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவித்தது.
AP
இதையடுத்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்துக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி துப்பாக்கி எந்திய மர்ம நபர் பேருந்து வரும் வரை காத்து இருந்து, பயணிகள் பேருந்தில் ஏறும் போது துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
AP
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தாக்குதலை நடத்திவிட்டு கால் நடையாக தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: நான்கு வயது சிறுவனை தலையில் குத்திய ஆசிரியர்: பள்ளியில் பொலிஸார் தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து குற்றவாளியை நகர் முழுவதும் தீவிரமாக தேடி வருவதாக போலிஸார் தரப்பு தெரிவித்துள்ளது.