தென் ஆப்பிரிக்காவில் விடுதியொன்றில் துப்பாக்கி சூடு: 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள சால்ஸ்வில் விடுதியில் சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் விடுதிக்குள் நுழைந்து, அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 வயது சிறுவன், 12 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி உட்பட மூன்று சிறார்களும் அடங்குவர்.
மேலும் 14 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தென் ஆப்பிரிக்க பொலிஸ் சேவை (SAPS) தெரிவித்ததாவது: “மொத்தம் 25 பேர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கினர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மூன்று துப்பாக்கி தாரர்களை கண்டுபிடிக்க விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்ட shebeen எனப்படும் அனுமதியற்ற பார் அருகே நடந்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 4.15 மணியளவில் நடந்த தாக்குதலுக்கான தகவல் பொலிஸாருக்கு 6 மணிக்கு மட்டுமே கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா, உலகின் மிக அதிக கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். சமீப காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் வெகுஜன துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pretoria hostel shooting December 2025, South Africa mass shooting news, Gunmen attack Pretoria hostel, Children killed in Pretoria shooting, SAPS investigation Pretoria massacre, Illegal shebeen shooting South Africa, Pretoria violent crime statistics, South Africa gun violence crisis, Pretoria hostel victims identified, Guardian Pretoria shooting report