திடீரென துப்பாக்கிகளுடன் சந்தையில் நுழைந்த பயங்கரவாதிகள்; 58 அப்பாவிகளை கொடூரமாக சுட்டுக் கொன்று வெறிச்செயல்
ஆப்பிரிக்க நாடான நைஜரில் இரு சக்கர வாகனங்களில் வந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாத கும்பல் ஒன்று சந்தை பகுதியில் திடீரென தாக்குதல் நடத்தியதில், 58 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
Chinedogarமற்றும் Darey-Daye ஆகிய கிராமங்களுக்கு அருகில் உள்ள Banibangou சந்தையில் திங்க்ட்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இரண்டு இருசக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன மற்றும் பல வாக்கங்கள் கடத்தப்பட்டுள்ளன.
மேலும், தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் கிரேட்டர் சஹாரா குழுவில் Islamic State-ஐ சேர்ந்த பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்படுவதாக அறியப்பட்டாலும், நடந்த படுகொலைகளுக்கு உடனடியாக உரிமை கோரப்படவில்லை.
சில நிமிடங்களில் 58 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.