ஆண்டுக்கு 26 லட்ச ரூபாய் சம்பளம்: ஆனால்... சலித்துக்கொள்ளும் இந்தியர்
மாதம் ஒன்றிற்கு 1.75 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். ஆனால், மாதக்கடைசியில் கையில் கொஞ்சம்தான் மிஞ்சுகிறது என சலித்துக்கொள்கிறார் இந்தியர் ஒருவர்.
ஆண்டுக்கு 26 லட்ச ரூபாய் சம்பளம்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மென்பொறியாளராக பணியாற்றும் ஒருவர், ஆண்டுக்கு 26 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.
மாதம் ஒன்றிற்கு, பிடித்தம் போக, கையில் 1.75 லட்ச ரூபாய் கிடைக்கிறதாம்.
ஆனால், வாடகை, மின்சாரம், EMIகள், மளிகை, பெற்றோருக்கு அனுப்பும் பணம், மகளின் பள்ளிச் செலவு என செலவுகள் எல்லாம் போக, மாதக் கடைசியில் 15,000 ரூபாய்தான் மிஞ்சுகிறதாம் அவருக்கு.
15,000 ரூபாயை வைத்து நான் என்ன செய்வது என்கிறார் அவர். பல இடங்களில் மாத சம்பளமாக வெறும் 15,000 ரூபாய் மட்டுமே வாங்குகிறவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியாது போலும்.
இதில், என் மனைவி வேலைக்குப் போவதில்லை, வேலைக்குப் போகும் இலக்கு இல்லாத மனைவியை திருமணம் செய்துகொண்டதால் தவறு செய்துவிட்டேனோ என்றும் கேட்டுள்ளார் அவர்.
என் மனைவி என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறும் அவர், ஆனாலும், ஒரு வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்லும் தம்பதியரைப் பார்க்கும்போதும், மாதக் கடைசியில் மீதம் வரும் பணத்தையும் பார்க்கும்போதும், ஒரு சுற்றுலா கூட செல்லமுடியவில்லையே என்ற ஏக்கம் வருவதாகவும் கூறுகிறார்.
தனியாக உழைத்து, பாரம் சுமந்து, சலித்து, களைத்துப்போனேன் என்கிறார் அவர்.
அவரது இடுகையைப் படித்த சிலர், என்னது, 40,000 ரூபாய் வாடகையா என் வாயைப் பிளக்க, சிலர், ஐயா, மனைவி வேலைக்குச் சென்றால், வீட்டைப் பார்த்துக்கொள்ள, பிள்ளையைப் பார்த்துக்கொள்ள, சமைக்க, துவைக்க எல்லாம் ஆள் வைக்கவேண்டியிருக்கும். அதற்கு செல்வாகும் என்பதை யோசித்துப் பார்த்தீர்களா என்கிறார்கள்.
இதெல்லாம் நீங்கள் திருமணத்துக்கு முன்பே யோசித்திருக்கவேண்டும் என்கிறார்கள் மற்றவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |