சிறுவனை வீடு புகுந்து வெட்டிய சக மாணவர்கள்! அதிர்ச்சியில் தாத்தா மரணம்..ஜி.வி.பிரகாஷ் கொந்தளிப்பு
தமிழக மாவட்டம் நெல்லையில் 12ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரும் தங்கை சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவன் மீது தாக்குதல்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டியின் மகன் சின்னத்துரை (17) 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி குறித்த மாணவரின் வீட்டிற்குள் நுழைந்த சக மாணவர்கள், அவரை வெட்டியதுடன் தடுக்க வந்த தங்கையையும் கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதிர்ச்சியில் தாத்தா மரணம்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிறுவனின் தாத்தா இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள பதிவில், 'தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்' என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்? சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்
— G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |