நேரலையில் பாலஸ்தீனத்திற்காக தீயிட்டு உயிர்விட்ட வீரர்! பிரபல தமிழ் நடிகர் உருக்கமான பதிவு
அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரகம் முன் தீயிட்டுக்கொண்டு உயிர்விட்ட விமானப்படை வீரருக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போரை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி, அமெரிக்க நகரமான வாஷிங்டன் டி.சியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே, சீருடையில் ஒருவர் தீயிட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
''பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்'' என கூறியபடியே அவர் தன்னை தானே தீயிட்டுக் கொண்டார். அவர் உயிரைவிட்டது நேரலையில் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்த நபரின் விபரம் தெரிய வந்தது. Aaron Bushnell என்ற அந்த 25 வயது இளைஞர் ஒரு அமெரிக்க விமானப்படை வீரர் ஆவார். நேரலையில் பதிவான இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது பதிவில், Aaron Bushnell-யின் புகைப்படத்தை பதிவிட்டு, ''மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி - தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல'' என தெரிவித்துள்ளார்.
மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி
— G.V.Prakash Kumar (@gvprakash) February 28, 2024
- தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல. pic.twitter.com/S2AEakkG17
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |