தமிழகத்தில் பாஜக தோற்கவில்லை - எச்.ராஜா
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நிலையில், பாஜக உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், தென் மாநிலங்களில் 4யில் மூன்று பங்கு கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ''நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆகவே, பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு மாநிலங்களில் புதிதாக (ஒரிசா, ஆந்திரா) பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 12 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இங்கு 3வது அரசியல் கட்சியாக பாஜகவை உருவாக்கியிருக்கிறோம். 2026யில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி அமைக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாரத ஜனதா கட்சியின் அலுவலகமான கமலாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.
அலுவலகத்தின் முன்பு எந்தவித ஆர்ப்பாட்டமும், பாரிய அளவிலான கூட்டமும் இல்லை என்பது காணொளி வாயிலாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |