சிலரது பழக்கங்களால் வருடத்திற்கு 30,000 பவுண்டுகள் செலவிடும் ஒரு பிரித்தானிய நகராட்சி
பிரித்தானியாவில் புகையிலை மென்று துப்புவதால் பழுப்பு நிறமாக கறை படிந்த நடைபாதைகள் மற்றும் கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கு நகராட்சி ஒன்று வருடத்திற்கு 30,000 பவுண்டுகள் வரை செலவிடுகிறது.
அசிங்கமான கறை
வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்லியின் வீதிகள் தொடர்ச்சியாக புகையிலை மென்று துப்புவதால் கறை படிந்த நிலையில் காணப்படுகிறது. பொதுவாக தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மக்களால் இந்த நிலை ஏற்படுகிறது.

வெற்றிலை, புகையிலை மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையை சில சமூகங்களால் பல நூற்றாண்டுகளாக மூச்சு புத்துணர்ச்சியூட்டலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இதை மென்று துப்புவதால் அசிங்கமான கறைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பிரெண்ட் நகராட்சி தற்போது இந்தப் பழக்கத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கையைத் தொடங்குகிறது.
கடுமையான முயற்சிகள் மேற்கொண்டும், இந்தக் கறையை நீக்க முடியவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சினை கடுமையான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
100 பவுண்டுகள்
நகராட்சி நிர்வாகத்தின் முடிவை அடுத்து தற்போது அமலாக்க அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் சிக்குபவர்களுக்கு 100 பவுண்டுகள் வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அப்பகுதி மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் விளம்பரப் பதாகைகளும் அமைத்துள்ளனர்.

வெற்றிலையை தொடர்ந்து பயன்படுத்துவது வாய்வழி மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களுக்கு காரணமாகும், அதே நேரத்தில் புகையிலையின் அதிக பயன்பாடு நிலை மறக்கச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலும் இந்திய மக்கள் என்பதால், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் எச்சரிக்கை விளம்பரம் செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |