கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் - எப்படி பயன்படுத்துவது?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது முடியை அழகாகவும் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்க வேண்டும் என்ற ஆசைஇருக்கும்.
ஆனால் ஒரு சில குறைப்பாட்டால் இந்த முடியானது சீக்கிரமாக வளர்வதை குறைத்துக்கொள்ளும்.
அந்தவகையில் சமையலறையில் இருக்கும் பெருஞ்சீரகத்தை வைத்து எப்படி முடி வளர்ச்சியை தூண்டலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் ஒரு பூக்கும் காய்கறி மற்றும் கேரட் மற்றும் செலரி போன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு பெரிய தாவரம், தண்டுகள் 8 அடி உயரம் வரை வளரும்.
இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. தனித்துவமான சுவை மற்றும் நறுமணமும் காணப்படுகிறது. இதில் அதிகளவில் ஆரோக்கிய நன்மைகள் காணப்படுவதால் பல நூற்றாண்டு காலமாக சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதை எப்படி முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் எனவும் காணப்படும் ஊட்டச்சத்துகள் குறித்தும் பார்க்கலாம்.
பெருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்து
நார்ச்சத்து பொட்டாசியம் வைட்டமின் சி மாங்கனீசு கலோரிகள் கொழுப்பு கொலஸ்ட்ரால் சோடியம் கார்போஹைட்ரேட்டுகள் ஃபைபர் புரதம்
இதில் காணப்படும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு உதவுவது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை சீக்கிரமாக தூண்டும்.
முடி வளர்ச்சிக்கு பெருஞ்சீரகம்
தினமும் 1 கரண்டி பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெண்டு சாப்பிடவும். இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உங்களது முடி வளர்ச்சியானது சீக்கிரமாக தூண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |