ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 304-ஆக உயர்வு
கரீபியன் தீவில் இருக்கும் Haiti தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரீபியன் தீவான ஹைத்தியில் இருக்கும் தலைநகர் Port-au-Prince-வுக்கு மேற்கே 7.5 மைல் தொலைவிலும், Petit Trou de நகரில் இருந்து 5 மைல் தொலைவிலும் சனிக்கிழமை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6 மைல் ஆழம் அளவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியிருப்பதாக US Geological Survey (USGS) அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
?First images out of #Haiti after a devastating magnitude 7.2 #earthquake struck the region this morning pic.twitter.com/Qm8AOekvGW
— Pichincha Communications (@EnPichinchaU) August 14, 2021
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ஆம் ஆண்டு இதே போன்ற பயங்கர நிலநடுக்கம் (ரிக்டர் அளவுகோலி 7.0 ஆக பதிவு) ஏற்பட்டது. அந்த தாக்கத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், இப்போது மீண்டும் இது போன்ற நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் மக்கள் கடும் பயத்துடன் உள்ளனர்.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 304 பேர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 1,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த இயற்கை பேரிடரை, "விரிவான சேதம்" என கூறிய அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry), அங்கு ஒரு மாத கால அவசர நிலையை அறிவித்துள்ளார்.
Some photos emerging from the South of Haiti this morning where a major earthquake struck. Prayers for people in the towns of Les Cayes, Jacmel, Jérémie.#prayforhaiti pic.twitter.com/lxqBenXPQE
— Ron Duprat (@TopChefRon) August 14, 2021
My heart goes out to those impacted by the 7.2 magnitude earthquake in Haiti.#PrayForHaiti ? pic.twitter.com/GF1saW0qlH
— Together We Share (@TogetherWeShar3) August 14, 2021