ஹைதி பூகம்பம்: பலி எண்ணிக்கை 724-ஆக உயர்வு!
ஹைதி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில், நேற்று (சனிக்கிழமை) 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மக்கள் அனைவரும் வீதியில் தஞ்சமடைந்தனர்.
இந்த 7.2 பூகம்பத்தை தொடர்ந்து, சனிக்கிழமை பிற்பகுதியில் ஹைதி தீவை 5.8 ரிக்டர் அளவிலான மற்றோரு பூகம்பம் உலுக்கியது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக EMSC குறிப்பிட்டுள்ளது, மேலும் லெஸ் கெய்ஸின் வடமேற்கில் 38 கிமீ தொலைவில் நடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2,800 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.