ஹைட்டி நாட்டின் அதிபர் படுகொலை! நள்ளிரவில் கமாண்டோக்கள் வெறிச்செயல்: வெளிவரும் பகீர் தகவல்
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினஸ் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் அறிவித்துள்ளார்.
ஹைட்டி நாட்டின் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலே உள்ள மலைகளில் உள்ள அவரது வீட்டில் கமாண்டோக்கள் குழுவினரால் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இடைக்கால் பிரதமர் அறிக்யைில் குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவு 1 மணிக்கு இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஹைட்டி முதல் பெண்மணி Martine Marie Etienne Joseph மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
? INFO - #Haïti : Jovenel Moïse, président d'Haïti depuis 2017, a été assassiné dans la nuit de Mardi à Mercredi par un commando armé, a annoncé le Premier ministre Claude Joseph dans un communiqué. pic.twitter.com/YAxpKyjCkx
— FranceNews24 (@FranceNews24) July 7, 2021
தான் இப்போது நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
The president of Haiti, @moisejovenel, has been assassinated by a team of commandos who attacked his home in the hills above Port-au-Prince. Pray for #Haiti and its people. pic.twitter.com/SiWNIwtxm8
— Michael Deibert (@michaelcdeibert) July 7, 2021