அமெரிக்க ராணுவ தளங்களுக்கு நேரடி அச்சுறுத்தல்: ஹமாஸ்- ஹிஸ்புல்லா அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும், ஈராக்கின் ஹிஸ்புல்லா அமைப்பும் அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்து வருகிறது.
இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா தங்களது 12 விமானம் தாங்கி போர்க் கப்பலை மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.
The Wall Street Journal: the US is considering sending a second aircraft carrier toward #Israel
— NEXTA (@nexta_tv) October 10, 2023
Meanwhile, the aircraft carrier USS Gerald R. Ford is about to arrive in the area near Israel. pic.twitter.com/SlPlgkEaqt
அத்துடன் ஹமாஸ் அமைப்பினர் காசா நகரில் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க சிறப்பு படைகள் இஸ்ரேலுக்கு வந்து இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தல்
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும், ஈராக்கின் ஹிஸ்புல்லா அமைப்பும் இணைந்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அமெரிக்கா போரில் தலையீட்டால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.
Hamas and Hezbollah began to threaten the United States
— NEXTA (@nexta_tv) October 10, 2023
The terrorists say that if the US intervenes in the war, they will start bombing their military bases.
"Our missiles will be directed against American bases if they intervene in the 'Flood of Al-Aqsa' battle," said Abu… pic.twitter.com/Zh6zXzkBSi
இது தொடர்பாக ஈராக்கின் ஹிஸ்புல்லா படை பொதுச்செயலாளர் அபு ஹூசைன் அல்-ஹமிதாவி தெரிவித்த தகவலில், அல்-அக்ஸா போர் வெள்ளத்தில் அமெரிக்கா தலையீட்டால் தங்கள் ஏவுகணைகள் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |