போருக்குத் தயார்... ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு: எல்லையில் குவிந்த இஸ்ரேல் படைகள்
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது, கொடுத்துவருகிறது இஸ்ரேல்.
ஹமாஸுக்கு ஆதராவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில் குதித்தது.
அவ்வப்போது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக்கொண்டே இருந்தனர்.
Credit: AFP
இஸ்ரேல் அதிரடி
ஹமாஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலில் இறங்க, ஹிஸ்புல்லா மீது கவனத்தைத் திருப்பியது இஸ்ரேல்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான Hassan Nasrallah என்பவர் பதுங்கியிருந்த பதுங்கு குழியை சரமாரியாக இஸ்ரேல் தாக்க, வெள்ளிக்கிழமை அவர் கொல்லப்பட்டார்.
Credit: EPA
அத்துடன், லெபனானிலிருந்து இயங்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான Fateh Sherif Abu el-Amin என்பவரும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 13,000 இஸ்ரேல் படையினர் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
Credit: Twitter
இஸ்ரேலின் கவச வாகனங்கள் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
தங்கள் தரப்பில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவரான Naim Qassem இன்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Credit: AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |