இஸ்ரேலின் மீது பெரிய ராக்கெட் தாக்குதல்: ஹமாஸின் திடீர் தாக்குதலால் அலறிய சைரன்கள்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தி அதிர்ச்சியளித்துள்ளனர்.
ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் எதிர்ப்பு ஊடுருவல் தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இஸ்ரேலின் டெல்-அவிவ் நகர் மீது ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் பெரிய ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் டெலிகிராம் சேனலில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், காசா பகுதியில் இருந்து இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல்-அக்ஸா டிவி தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் குறித்த தகவல் இல்லை
இஸ்ரேலின் மைய நகரத்தில் திடீரென சைரன்கள் ஒலித்ததால், இஸ்ரேலிய ராணுவம் ராக்கெட் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை விடுத்தது.
ஆனால், இந்த சைரன்கள் ஒலித்ததற்கான காரணத்தை இஸ்ரேல் வெளியிடவில்லை.
அதே சமயம் இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் தெரியவில்லை என்றும் இஸ்ரேலிய அவசர மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |