அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மற்றொரு ஹமாஸ் தலைவர்: இஸ்ரேல் தாக்குதலில் பலி
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், நூற்றுக்கும் அதிகமானோரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
மூளையாக செயல்பட்ட மற்றொரு ஹமாஸ் தலைவர்
அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர் முகம்மது அபு இத்திவி (Mohammed Abu Itiwi) என்பவர்.
இந்த அபு, அக்டோபர் 7 தாக்குதலின்போது இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கொலை மற்றும் கடத்தலை முன்னின்று நடத்தியவர் ஆவார்.
அத்துடன், பிரித்தானிய இஸ்ரேல் குடிமகனான Aner Shapira என்பவர் மேலும் சிலருடன் பாதுகாப்பான இடம் ஒன்றில் மறைந்திருந்தபோது, அவர்களை நோக்கி இந்த அபு எட்டு கையெறிகுண்டுகளை வீசியுள்ளார்.
அந்த குண்டுகளில் ஏழு குண்டுகளை பிடித்து திருப்பி வீசியுள்ளார் Aner. ஆனால், எட்டாவது குண்டு வெடித்துவிட Anerம் அவருடன் இருந்தவர்களும் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டார்கள்.
தற்போது, இந்த பயங்கரவாதியான அபு கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய மாதம் காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித்தாக்குதலில் அபுவின் வாகனம் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் அவர் கொல்லப்பட்டதாக, நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவ தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தன் மகனைக் கொன்ற அபு கொல்லப்பட்ட செய்தி அறிந்த Anerஇன் தந்தையான Moshe, அபு கொல்லப்பட்டதில் மகிழ்ச்சி, பழிக்குப் பழி வாங்குவதற்காக அல்ல, இனி அவரால் யாரையும் கொல்லமுடியாது என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |