செயல்பாட்டு மையத்தை துருக்கிக்கு மாற்றிய ஹமாஸ்: லண்டன் ஊடகம் முக்கிய தகவல்
ஹமாஸ் தன்னுடைய தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை செயல் அலுவலகத்தை துருக்கிக்கு மாற்றிய ஹமாஸ்
லண்டனை தளமாக கொண்ட அரபு செய்தி ஊடகமான “அஷ்மார்க் அல் அவ்ஸத்” வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், ஹமாஸ் அமைப்பினர் தங்களது பெரும்பாலான தலைமை செயல் அலுவலகத்தை கத்தாரில் இருந்து துருக்கிக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முக்கிய 3 நபர்களை மேற்கோள் காட்டி அரபு செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஹமாஸ் அமைப்பினர் நடத்திய சமீபத்திய கூட்டங்கள் அனைத்தும் துருக்கியில் வைத்தே நடத்தியுள்ளது.
மேலும் ஹமாஸின் அரசியல் பிரிவு தேர்தல் கூட துருக்கி வைத்தே நடத்தப்பட்டுள்ளது.ஆனால் இதில் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நோக்கத்திற்கு முக்கிய காரணமாக, சிரியா அரசுடன் நெருக்கமான உறவை மேம்படுத்தவே அந்த நாட்டுக்கு அருகில் இருக்க ஹமாஸ் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் காசாவில் இருந்த தனது நிர்வாக அமைப்பை சமீபத்தில் கலைத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |