இஸ்ரேலில் ஒரு இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ்: வெளியாகும் பரபரப்பு தகவல்
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்றதொரு தாக்குதலை இஸ்ரேலில் நடத்த ஹமாஸ் திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் ஒரு இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு திட்டம்
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பு நிகழ்த்திய இரட்டைக்கோபுர தாக்குதலை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.
அந்த பயங்கர தாக்குதலில் 2,996 பேர் உயிரிழந்தார்கள்.
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் அதிரடி தாக்குதல் நிகழ்த்தியது. 2,000க்கும் அதிகமான ராக்கெட்கள் காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில், சுமார் 1,139 பேர் கொல்லப்பட்டார்கள்.
விடயம் என்னவென்றால், உண்மையில் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் மீது நிகழ்த்த ஹமாஸ் முதலில் திட்டமிட்டுள்ளது.
அது இஸ்ரேலிலுள்ள அஸ்ரியேலி நிலையம் (Azrieli Towers) என்னும் இரட்டைக் கோபுரங்கள் மீது நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடும்.
அந்த கட்டிடங்களில் பல அலுவலகங்கள், ஷாப்பிங் மால் ஒன்று மற்றும் ஒரு ரயில் நிலையமும் உள்ளன. அப்படி அங்கு ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்குமானால், இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கக்கூடும்.
ஆனால், அந்த பயங்கர திட்டத்தை நிறைவேற்ற தன்னிடம் ஆள் பலமோ, பொருள் பலமோ இல்லை என்பதை ஹமாஸ் புரிந்துகொண்டதால், அந்த திட்டம் கைவிடப்பட்டதாக Washington Post ஊடகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |