2 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்! குடும்பத்தினர் கோரிக்கை
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரண்டு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
ஹமாஸ் பிடியில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள்
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பிணைக் கைதிகளாக காசாவில் சிறைவைக்கப்பட்டுள்ள இரண்டு இஸ்ரேலியர்களை காட்டும் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், பிணைக் கைதிகளான இரண்டு இஸ்ரேலியர்கள் தரையில் அமர்ந்து ஹீப்ரு மொழியில் கேமராவை நோக்கி பேசுகிறார்கள்.
இந்த வீடியோவின் சரியான பதிவு திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிணைக் கைதி ஒருவர் தங்கள் சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி அவர்கள் வலியுறுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலின் போது நோவா இசை விழாவில் இருந்து கடத்தப்பட்ட எல்கானா போபோட்(Elkana Bohbot) மற்றும் யோசேப் ஹைம் ஒஹானா(Yosef Haim Ohana) ஆகியோரை AFP செய்தி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.
இந்த சம்பவத்தில், காசாவில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விவகாரம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
குடும்பத்தினர் கோரிக்கை
இந்த வீடியோ வெளியானதற்கு எல்கானா போபோட்டின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் உடனடியாக தலையிட்டு பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |