காசாவில் பதவி இறங்கிய ஹமாஸ் ஆட்சிக் குழு: பொதுமக்களுக்கு அரசு சேவைகள் கிடைக்குமா?
காசாவில் செயல்பட்டு வந்த முக்கிய அவசரகால குழுவை கலைப்பதாக ஹமாஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவசரகால குழு கலைப்பு
காசா பகுதியில் நீடித்து வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு காசாவில் செயல்பட்டு வந்த அவசரகால ஆட்சிக் குழுவை கலைப்பதாக ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
கலைக்கப்பட்ட அவசரகால ஆட்சிக் குழுவின் பொறுப்புகள் புதிய காசா நிர்வாகத்திற்கான தேசிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவசரகால குழு முகமது அப்துல் காலிக் அல்-ஃபார்ரா தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முக்கிய முன்னெடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கிய பகுதியாக காசா நிர்வாகம் சுதந்திரமான பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது குறிப்பிட்டுள்ளது.
இது பாலஸ்தீன மக்களின் நலனுக்கும், எதிர்காலத்திற்கு தேவையான மூலோபாய நடவடிக்கை, எனவே நிர்வாக பொறுப்புகளை மாற்ற தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
சேவைகள் தடையின்றி தொடரும்
நிர்வாக மாற்றத்தின் போது அரசின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த தற்போது அரசில் பணியாற்றும் அனைவரும் தொடர்ந்து தங்கள் சேவைகளை வழங்குவர் என்று ஹமாஸ் உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவை எந்தவொரு தடையும் இன்றி தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறக்கட்டளை மற்றும் மதவிவகார அமைச்சகத்தின் வெளியேறும் துணைச் செயலாளர் துல் ஹாடி இடைக்கால நிர்வாகத்தின் மாற்றத்தை மேற்பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக இஸ்ரேலின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் பொறுப்புகள் மாற்றப்படும் வரை அரசு நிர்வாக மாற்றத்தை அவர் கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |