காசா போர் நிறுத்தம்: 4 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் அறிவிப்பு
நான்கு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
பிணைக்கைதிகள் உடல் பரிமாற்றம்
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நான்கு இறந்த பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு இன்று இரவு திருப்பி அனுப்ப இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஷுலோமோ மன்சூர் (Shlomo Mansour, 86), ஓஹாத் யஹலோமி (Ohad Yahalomi, 50), சாச்சி ஐடன் (Tsachi Idan, 50), மற்றும் இட்சிக் எல்காரட் (Itzik Elgarat, 69) ஆகியோரின் உடல்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த பரிமாற்றம், இஸ்ரேல் 600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் பரந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.
பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் தாமதம்
பிணைக் கைதிகள் விடுதலை கடந்த வார இறுதியில் நடக்கவிருந்தது, ஆனால் ஹமாஸ் இதற்கு முன் பிணைக்கைதிகளை ஒப்படைத்த விதத்தில் இஸ்ரேல் அதிருப்தி தெரிவித்ததால் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் தாமதமானது.
குறிப்பாக, இதற்கு முந்தைய பரிமாற்றங்களில் நடந்த பொது மேடை சந்தர்பங்களின்றி உடல்களை திருப்பி அனுப்ப ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பரிமாற்றத்தின் சரியான நேரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |