'இஸ்ரேலுக்கு மரணம்' என கோஷமிட்ட மக்கள்! அயத்துல்லாவின் தலைமையில் ஹமாஸ் தலைவருக்கு இறுதி ஊர்வலம்
ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைவர் அயத்துல்லாவின் தலைமையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
39,445 பேர்
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,445 என ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், இஸ்மாயில் ஹனியேயின் உடல் தோஹாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவரின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைவர் அயத்துல்லாவின் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
படுகொலையைக் கண்டித்து
தெஹ்ரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், ''ஈரான் எனும் இஸ்லாமிய குடியரசின் பிரதேசத்தில், தியாகியாகிய இஸ்மாயில் ஹனியேயின் ரத்தத்திற்கு பழிவாங்குவது எங்கள் கடமை'' என அயதுல்லா தெரிவித்தார்.
புதன்கிழமை அதிகாலை முதல் ஹனியேவின் படுகொலையைக் கண்டித்து மக்கள் பலர், ஈரான் முழுவதும் உள்ள நகரங்களில் வீதியில் இறங்கி கோஷமிட்டனர்.
குறிப்பாக, தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர், ''இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்'' என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |