நெதர்லாந்துக்குப் பயணத்தைத் தொடங்கிய ஹன்டா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்
ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்வி ஹோண்டியஸ் கப்பல், ஸ்பெயினின் டெனெரிஃப் தீவிலிருந்து நெதர்லாந்திற்குப் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதர்லாந்துக்கு புறப்படும்
தொடர்புடைய உல்லாசக் கப்பலில் இருந்து கடைசி ஆறு பயணிகளும் சில பணியாளர்களும் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பயணிகளை துருவப் பயணக் கப்பல் ஏற்றிச் செல்லும். குறித்த கப்பல் ஸ்பெயினின் Granadilla de Abona துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அதிலிருந்து 19 பணியாளர்களும் இரண்டு மருத்துவர்களும் இறங்கியுள்ளனர்.
தொடர்புடையக் கப்பலில் அவுஸ்திரேலியர்கள் நால்வர் மற்றும் நியூசிலாந்து நாட்டவர் ஒருவர் என 25 பேர்கள் மற்றும் மருத்துவர் ஒருவரும் நர்ஸ் ஒருவருடன் நெதர்லாந்துக்கு புறப்படும்.
enerife-இல் வெளியேற்றப்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு உள்ளூர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; அங்கு அவர்கள் நெதர்லாந்து செல்லும் இரண்டு விமானங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதனிடையே, பணி வெற்றிகரமாக முடிந்தது; நாங்கள் நடவடிக்கையை முடித்துவிட்டோம், கப்பல் தற்போதுதான் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம்
கப்பல் ஊழியர்கள் தங்களது தனிமைப்படுத்தலை நெதர்லாந்தில் நிறைவு செய்வார்கள் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம் அவுஸ்திரேலியாவுக்குத் தொடர்ந்து செல்லும் என்றும், அவர்கள் எங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் ஸ்பெயின் சுகாதார அமைச்சர் கார்சியா கூறியுள்ளார்.
தெற்கு அர்ஜென்டினாவிலிருந்து எம்வி ஹோண்டியஸ் கப்பல் புறப்பட்டு 41 நாட்களுக்குப் பிறகு, ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, ஒரு சிக்கலான நடவடிக்கையின் விளைவாக, 94 பேர் மீட்கப்பட்டு, அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் ஒரு நெதர்லாந்து தம்பதி மற்றும் ஒரு ஜேர்மானியர் என மூவர் கப்பலிலேயே மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |