குறைந்த செலவில் விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு!
குறைந்த செலவிலான விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு குறித்து இங்கே பார்க்கலாம்.
தொலைதூர வேலை (Remote Working) செய்வதன் மூலம் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் நிலையில், குறைந்த செலவிலான மற்றும் வசதியான இடத்தை தேர்வு செய்வது சவாலாக மாறியுள்ளது.
ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
பின்லாந்து
ஆனால், "ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு" என்று அழைக்கப்படும் பின்லாந்து இதற்கு வித்தியாசமாக, குறைந்த வருவாய் தேவையுடன் விசா வழங்குகிறது.
€1,220 மாத வருமானம் இருந்தால், சுயதொழில் (Self-employment) விசா மூலம் பின்லாந்தில் வேலை செய்யலாம்.
இந்த விசா 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும், மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் Freelancer-கள், ஆலோசகர்கள், தொழில்முனைவோர்கள் பின்லாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும்.
பின்லாந்து உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக (14வது இடம்) கருதப்படுகிறது. இது 10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Helsinki, Oulu, Turku போன்ற நகரங்கள் டிஜிட்டல் நோமாட்களுக்கு சிறந்த இடங்களாகும்.
விசா செலவு:
ஓன்லைன் விண்ணப்பம் - €400 (£331)
காகித விண்ணப்பம் - €496 (£400)
குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத்தரம் வேண்டும் என்றால், பின்லாந்து உங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Finland, Happiest Country in the world, Beautiful country with cheap visas for expats