வாட்சப் புத்தாண்டு வாழ்த்து மூலம் பண மோசடி - எச்சரிக்கும் காவல்துறை
வாட்சப்பில் வரும் புத்தாண்டு வாழ்த்து மூலம் பண மோசடி நடைபெறும் அபாயம் உள்ளதாக சைபர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
2026 புத்தாண்டு வாழ்த்து
உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்னர் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதாக இருந்தால், வாழ்த்து அட்டைகளை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், உலகத்தில் எந்த மூலையில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் டெக்ஸ்ட், போட்டோ, வீடியோ போன்ற வழிகளில் வாழ்த்துகளை பரிமாறி கொள்ள முடிகிறது.
பல நாட்களாக தொடர்பிலே இல்லாத நண்பர்கள் கூட, வாழ்த்து செய்திகளை பரிமாறி கொள்வார்கள்.
ஆனால், இத்தகைய வாழ்த்து செய்திகள் மூலம், சைபர் மோசடியாளர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
புத்தாண்டு வாழ்த்து மூலம் மோசடி
"உங்கள் சிறப்பு புத்தாண்டு வாழ்த்துக்காக இங்கே கிளிக் செய்யவும், "உங்கள் புத்தாண்டு ஆச்சரியப் பரிசைப் பெறுங்கள்" என் கவர்ச்சிகரமான வாசகங்களுடன் ஒரு apk file அல்லது link செய்தி வரும்.

APK பைல் என்பது கூகிள் பிளே ஸ்டோர் வழியாக அல்லாமல், ஸ்மார்ட் போனில் ஒரு செயலியை நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கோப்பு வடிவம் ஆகும்.
இவ்வாறாக செயலி நிறுவப்படும் போது, அது உங்கள் OTPக்களை படிப்பது, வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை அணுகலை பெறும். இதன் மூலம் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக திருட வாய்ப்புள்ளது.

இதே போல், லிங்க் கிளிக் செய்து வேறு இணையதளத்திற்கு உள்ளே செல்லும் போது, அங்கு பரிசுகளை உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி கணக்கு விவரங்களை கேட்கும். அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
இந்த மோசடியானது புத்தாண்டு வாழ்த்து மட்டுமில்லாமல் பரிசு கூப்பன், இலவச டேட்டா, அரசு திட்டங்கள், வங்கி சேவைகள் என பல வழிகளில் நடைபெறுகிறது.
அறிமுகமில்லாத எண்கள் மட்டுமல்லாது, நீங்கள் பதிவு செய்திருந்த எண்களில் இருந்து வந்தால் கூட கிளிக் செய்ய வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் கூட போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதை உங்களுக்கு Forward செய்ய வாய்ப்புள்ளது.
எப்படி தடுப்பது?
முதலில் வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்கில் Auto Download என்ற அம்சத்தை off செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் அனுமதியில்லாமல் வாட்ஸ்அப்பில் இருந்து வரும் எந்தவொரு புகைப்படம், வீடியோ போன்ற கோப்புகளை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்ய முடியாது.

லிங்கை கிளிக் செய்யும் முன்னர் அதன் URL அதிகாரபூர்வமான இணையதளத்தின் லிங்கா என உறுதிப்படுத்தி விட்டு கிளிக் செய்யவும்.
மொபைல்ஆப் டவுன்லோட் செய்வதாக இருந்தால் வாட்ஸ்அப்பில் வரும் APK File களை டவுன்லோட் செய்ய வேண்டாம். Google அல்லது ஆப்பிள் playstore மூலம் மட்டும் டவுன்லோட் செய்யுங்கள்.
அப்படி APK File களை இன்ஸ்டால் செய்து விட்டால், உடனடியாக அதை Uninstall செய்யுங்கள்.
மேலும், மோசடியில் சிக்கியதாக உணர்ந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்கு தகவல் அளியுங்கள். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |