ஹர்திக் பாண்டியா வாட்ச்சின் விலை ஆசிய கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கையில் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை ஆசிய கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்.
விலை எவ்வளவு?
சமீப காலமாக பிரபலங்கள் வைத்திருக்கும் கார் மற்றும் வாட்ச் ஆகியவை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா Watch Collection பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக அவரிடம் உள்ள வாட்ச் ஒன்றின் விலையானது ஆசிய கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்.
அதாவது அவர் ஆசியக் கோப்பை பயிற்சி அமர்வின் போது கையில் Richard Mille RM 27-04 கடிகாரத்தை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். இது ஆசியக் கோப்பை போட்டியில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையான ரூ.2.6 கோடியை விட எட்டு மடங்கு அதிகம்.
இந்த பிரத்யேக கடிகாரம் உலகம் முழுவதுமாக 50 மட்டுமே தயாரிக்கப்பட்டன. அரிதான இந்த வாட்ச் முதன் முதலாக ரஃபேல் நடாலுக்காக தயாரிக்கப்பட்டது.
அதேபோல ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டியின் போது அணிந்திருந்த RM 11 வெள்ளை ceramic watch-ன் விலையானது சுமார் ரூ.2.76 கோடியாகும்.
அவரிடம் உள்ள இத்தாலி பதிப்பு வாட்சான Richard Mille RM 67-02 extra thin watch விலை ரூ.3.9 கோடி ஆகும்.
மேலும், அவரிடம் இருக்கும் richard mille rm 6702 alexis pinturault வாட்சின் விலை ரூ.3.37 கோடி மற்றும் richard mille rm 57-05 eagle ரஷ்யா வாட்சின் விலை ரூ.10.92 கோடி ஆகும்.
அதுமட்டுமல்லாமல் ரூ.11.14 மதிப்பு கொண்ட richard mille rm 6702 தானியங்கி வாட்சையும் வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |