ருத்ரதாண்டவமாடிய கேப்டன் ஹர்மன்பிரீத்! WPLயில் மும்பை இந்தியன்ஸ் தாறுமாறு வெற்றி
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான WPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
192 ஓட்டங்கள் குவித்த குஜராத் ஜெயண்ட்ஸ்
நவி மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் 2026 (WPL) தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
X/imfemalecricket
முதலில் ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது. ஜார்ஜியா வாரெஹம் 43 (33) ஓட்டங்களும், பார்த்தி ஃபுல்மலி 36 (15) ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஜோடி சொதப்பியது. எனினும் அமன்ஜோத் கவுர் 26 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்தார்.
ஹர்மன்பிரீத் கவுர் ருத்ரதாண்டவம்
பின்னர் கைகோர்த்த அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் நிக்கோலா கேரி அதிரடியில் மிரட்ட, மும்பை அணி 19.2 ஓவர்களில் 193 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்களும், நிக்கோலா கேரி (Nicola Carey) 23 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர்.
ரேணுகா சிங், காஷ்வீ கௌதம் மற்றும் சோபி டிவைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
Photo: Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |